விஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி... நேரடி ஓடிடி.,யில் ரிலீஸுக்கு ரெடி
சென்னை : டைரக்டர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ள படம் எனிமி. இந்த படத்தை வினோத் குமார், மினி ஸ்டூடியோ பேனரில் தயாரித்துள்ளார்.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட எனிமி படத்தின் ஷுட்டிங், முதல்கட்டமாக துபாயில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் முதல் கட்ட ஷுட்டிங் முடிந்த நிலையில், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நிறைவை அறிவித்த டைரக்டர்
அதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் கடைசி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. சமீபத்தில் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை டைரக்டர் ஆனந்த் சங்கர் ஃபோட்டோவுடன் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

2 வது முறையாக இணைந்த விஷால் – ஆர்யா
பாலாவின் அவன் இவன் படத்திற்கு பிறகு விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ள இரண்டாவது படம் இது. இவர்களுடன் கருணாகரன், மிருனாளினி ரவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஓடிடி ரிலீசுக்கு ரெடி
இந்நிலையில் எனிமி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என தெரியாததால் படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரபல ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அடுத்து காத்திருக்கும் படங்கள்
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுக்கும் துப்பறிவாளன் 2 ரிலீசுக்காக தயாராகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பேட்டா பரம்பரை படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











