twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டு வீடியோல மெர்சல் பார்த்திருக்கீங்களே... வெட்கமா இல்ல! - எச் ராஜாவை விளாசும் விஷால்

    By Shankar
    |

    சென்னை: மெர்சல் படத்தை இணையத்தில் வெளியான திருட்டு வீடியோ மூலம் பார்த்ததாக கூற வெட்கமாக இல்லையா? என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவைக் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    Vishal blasts H Raja

    ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் 'நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்' என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

    ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டனவா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள்? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

    எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் உள்ள எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    -இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

    English summary
    Producers Council President and Nadigar Sangam Secretary Vishal blasting BJP Secretary H Raja for watched Mersal online.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X