»   »  விஜய்+விஜயகாந்த் ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

விஜய்+விஜயகாந்த் ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் தனது 38வது பிறந்தநாளை இன்று விஜய் மற்றும் விஜயகாந்த் பாணியில் கொண்டாடியுள்ளார்.

நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், நண்பர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் தனது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி தனது காதலி வரலட்சுமிக்கு ஊட்டிவிட்டார்.

சென்னையில் உள்ள மெர்ஸி ஹோம்ஸ் முதியோர் இல்லத்திற்கு சென்ற விஷால் அங்குள்ளவர்களுக்கு உணவு அளித்ததுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இளைய தளபதி விஜய் தனது பிறந்தநாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது போன்று விஷாலும் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாள் அன்று நல்லது செய்வது போன்று விஷாலும் செய்துள்ளார். விஜயகாந்த் பிற நாட்களிலும் நல்லது செய்து தான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உதவி அவர்களின் மனங்களை குளிர வைத்துள்ளார் விஷால்.

English summary
Actor Vishal has celebrated his 38th birthday in Style on monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil