»   »  பிச்சை எடுக்க வருகிறீர்களான்னு 'விஷால் அன்ட் கோ'வை கேட்ட மலேசிய பத்திரிகை

பிச்சை எடுக்க வருகிறீர்களான்னு 'விஷால் அன்ட் கோ'வை கேட்ட மலேசிய பத்திரிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
நட்சத்திர கலை விழாவை அசிங்க படுத்திய மலேசிய பத்திரிக்கை..!!

சென்னை: பிச்சை எடுக்க இங்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் நட்சத்திர கலைவிழா பற்றி செய்தி வெளியானதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட விஷால் அன்ட் கோ மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள். சில பிரபலங்களை சென்னை விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பினார்கள்.

இது குறித்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

வருத்தம்

வருத்தம்

மலேசியாவில் நடந்த விஷயங்கள் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. பிச்சை எடுப்பதற்கு இந்த ஊருக்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள். ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அரங்கில் 15 ஆயிரம் பேர் இருந்தார்கள்.

பணம்

பணம்

சினிமாவில் அசிங்கமான ஒரு மனோபாவம் உள்ளது. பணத்தால் யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவர் ஞானவேல்ராஜா.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜை விமான நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டு உங்களுக்கு டிக்கெட் இல்லை திரும்பிப் போகலாம் என்றார்கள். விஜயகாந்த் நடத்தியபோது திறம்பட நடத்தினார்.

ரஜினி

ரஜினி

கமல், ரஜினி மூத்த நடிகர்கள் என்று சென்றார்கள். அவர்களை போன்றே நானும் மூத்த நடிகன் தான். என்ன அவர்கள் என்னைவிட அதிகம் பணம், கொஞ்சம் அதிகம் பிரபலமானவர்கள். அவ்வளவு தான். அவர்களுக்கு இரண்டு கொம்போ, எனக்கு ஒரு கொம்போ இல்லை.

விக்ரமன்

விக்ரமன்

பாக்யராஜ் மனவருத்தப்பட்டதாக தகவல். இயக்குனர் விக்ரமனை அழைத்து உங்களுக்கு டிக்கெட் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார்கள். இங்கு யாருமே முக்கியமானவர்கள் இல்லை. முக்கியமானவர்கள் எல்லாம் முன்பே கிளம்பிவிட்டார்கள்.

திட்டமிடல்

திட்டமிடல்

பார்க் ஹோட்டலில் ஒரு தளத்தையே எடுத்து விழாவுக்கு திட்டமிட்டார்கள். அங்கு எவ்வளவு செலவாகும். சாதாரண ஹோட்டலுக்கு சென்றால் பின்புறம் வெடித்துவிடுமா?. மலேசியா விழாவுக்கு என்னை அழைத்தார்கள். எனக்கு சரிசமான ட்ரீட்மென்ட் வேண்டும். பிசினிஸ் கிளாஸ் டிக்கெட் வேண்டும் என்றேன் என எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

English summary
Actor cum BJP functionary S. Ve. Shekher said in an interview that Malaysia media asked whether the Tamil film industry people are coming to beg there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X