TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
"ஆமா அவங்களே தான்..” சந்தோசமாக, அதிகாரப்பூர்வமாக காதலி போட்டோவை டிவீட் செய்த விஷால்!

சென்னை: தனது காதலியான நடிகை அனிஷா ரெட்டியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.
விஷாலுக்கும், ஆந்திரப் பெண்ணுக்கும் விரைவில் திருமணம் என விஷாலின் தந்தை சமீபத்தில் அறிவித்தார். விஷாலும் பேட்டி ஒன்றில் அதனை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து, விஷாலின் காதலி அவர் தான் என பெண் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. ஆனால் அது தவறான தகவல் என விஷால் தரப்பு மறுத்தது.

அதன் தொடர்ச்சியாக விஷாலும், தெலுங்குப் பட நடிகையான அனிஷா ரெட்டியும் சேர்ந்து நிற்கும் சில புகைப்படங்கள் நேற்றிரவு இணையத்தில் வெளியானது. அவர்தான் விஷாலைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், இந்தத் தகவலைத் தற்போது விஷாலும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஆமாம். மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவள் பெயர் அனிஷா அல்லா. ஆமாம் அவள் சம்மதம் தெரிவித்து விட்டார். இப்போது அது உறுதியாகிவிட்டது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய அடுத்த கட்டம். விரைவில் தேதியை அறிவிக்கிறேன்" என விஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக கடந்த சில தினங்களாக நீடித்து வந்த விஷால் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Yes.. happy. Too happy. Happiest. Her name s #AnishaAlla. And yes she said yes. And it’s confirmed. My next biggest transition in life.😬😬😬😬❤️❤️❤️😘😘😘 will be announcing the date soon. God bless. pic.twitter.com/NNF7W66T2h
— Vishal (@VishalKOfficial) January 16, 2019
நடிகை அனிஷா ரெட்டி, தெலுங்குப் பட நடிகை ஆவார். 2016ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான அவர், வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டியில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.