»   »  ராதாரவியுடன் மோதப்போகிறேன்... விஷால் அறிவிப்பு

ராதாரவியுடன் மோதப்போகிறேன்... விஷால் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து மோதப் போகிறேன் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு சரத்குமார் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். தற்போது ராதாரவி உள்ளிட்ட சரத்குமார் தலைமையிலான அணியினர் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

விவாதம்...

விவாதம்...

இந்நிலையில், நேற்று தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டு நடிகர் சங்க தேர்தல் குறித்து விவாதித்தனர்.

விஷால் போட்டி...

விஷால் போட்டி...

அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து நான் களமிறங்கப் போகிறேன்' என்றார்.

மருத்துவ முகாம்...

மருத்துவ முகாம்...

இந்நிலையில், இன்று (ஜூன் 14) ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார் விஷால். அப்போது நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நிபந்தனை...

நிபந்தனை...

அதற்கு விஷால், "நடிகர் சங்க விவகாரத்தைப் பொறுத்தவரையில், ஸ்பை சினிமாஸ் நிறுவனத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டும் என்று அறிவித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கத் தயாராக இருக்கிறோம்.

கட்டிடம் தேவை...

கட்டிடம் தேவை...

எங்களுக்கு தேவை நடிகர் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் அவ்வளவு தான். ஒரே சங்கத்தில் இருந்து கொண்டு சண்டையிட்டு கொள்வது நல்லதாக இல்லை. நாங்கள் தேவையில்லாம எந்த நடிகர்களுடனும் பிரச்சினை செய்யவில்லை.

மல்டிபிளக்ஸ்...

மல்டிபிளக்ஸ்...

எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டவர்கள் கட்டிய கட்டிடத்தை இடித்துவிட்டு மல்டிபிளக்ஸ் கட்ட அனுமதிக்க மாட்டோம். மல்டிபிளக்ஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டினால் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

English summary
In a interview to a television channel actor Vishal has said that he will contest againt actor Radharavi in action's association election.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil