»   »  வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்!

வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை!

கடந்த ஒரு மாத காலமாக சினிமா ஸ்ட்ரைக் நடந்து வருவதால், வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

சமீபத்தில் ஒரு இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்டார்.

Vishal donates Rs 10 lakh to Fefsi

அதே மேடையில், பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அந்த 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால். அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.

சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.

English summary
Prodiucers Council President Vishal has donated Rs 10 lakh to Fefsi Union

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X