எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களே.. உங்க திருமணம் எப்போ.. விஷாலை பார்த்து புலம்பிய பெண் !
சென்னை: நடிகர் விஷால் சென்னையில் உள்ள மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
அந்த இலவச திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷாலை பார்த்து பரிதாபப்பட்ட ஒரு பெண் ரசிகை பேசிய பேச்சு பரபரப்பை கிளப்பியது.
சீக்கிரமே காதல் திருமணம் செய்வேன், எனக்கான பெண் கிடைப்பார் என்றும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷாலின் அதிரடி மாற்றம்
லத்தி, மார்க் ஆண்டனி என சினிமாவில் ஒரு பக்கம் படு பிசியாக நடித்து வரும் நடிகர் விஷால், சமீபத்தில் காசிக்கு எல்லாம் சென்று விட்டு வந்தார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த விஷாலுக்கு பிரதமர் மோடியும் பதில் ட்வீட் போட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், அடுத்த அதிரடியாக 11 பேருக்கு விஷால் திருமணம் செய்து வைத்துள்ளார்.

11 ஜோடிகளுக்கு திருமணம்
நடிகர் விஷால் சென்னையில் உள்ள மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ஜோடிகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தி இருந்தார் விஷால். மேலும், அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட சீர்வரிசை
11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி, 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார். இந்து, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் என மூன்று மதங்களிலும் வழிபட்டு, மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்தார் நடிகர் விஷால்.

பெண் புலம்பல்
எல்லாருக்கும் திருமணம் செய்து வைக்கிறீங்க, உங்களுக்கு எப்போ விஷால் திருமணம் ஆகும், அதை பார்க்க ரொம்பவே ஆவலுடன் இருக்கிறேன் என ஒரு பெண் ரசிகை ரொம்பவே ஃபீல் பண்ணி பேசிய வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதே கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பிய நிலையில், அதற்கு விஷால் அளித்த பதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காதல் திருமணம் தான்
பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்விக்கு வெட்கப்பட்ட விஷால், நிச்சயம் ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து காதலித்துத் தான் திருமணம் செய்து கொள்வேன். உங்கள் அனைவரும் அறிய விரைவில் என் திருமண அறிவிப்பு வெளியாகும் நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று பேசியிருந்தார்.

தடைபட்ட திருமணம்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரைத்தான் விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என ஆரம்பத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அதன் பின்னர் அனிஷா என்பவருடன் நடிகர் விஷாலுக்கு அதிரடியாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியாமல் போனது.


Click it and Unblock the Notifications











