»   »  நிவின்பாலி படத்தில் அறிமுகமாகும் விஷால் அப்பா!

நிவின்பாலி படத்தில் அறிமுகமாகும் விஷால் அப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவின் பாலி தமிழில் நடித்து வரும் சாண்டா மரியா படத்தில், விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷாலின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜி.கே.ரெட்டி தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Vishal Father G.K.Reddy Debut in Tamil

பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் ராதாரவி நடித்த வேடத்தில் ஜி.கே.ரெட்டி நடித்திருந்தார். தற்போது தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வரும் சாண்டா மரியா தமிழ்ப்படத்தில், முக்கிய வேடமொன்றில் ஜி.கே.ரெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட்டடித்த '‘உள்ளிடவாறு கண்டன்தே'' படத்தின் தமிழ் ரீமேக்காக சாண்டா மரியா உருவாகி வருகிறது.

அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஸ்ரத்தா, நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி, மணப்பாடு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

English summary
Vishal Father Make his Tamil Debut in Nivin Pauly Film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos