»   »  தியேட்டர்காரர்களுக்கு விஷால் போட்ட கிடுக்கிப்பிடி... ஸ்ட்ரைக் தொடர்கிறது!

தியேட்டர்காரர்களுக்கு விஷால் போட்ட கிடுக்கிப்பிடி... ஸ்ட்ரைக் தொடர்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் விஷால்.

க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களின் அதிகபட்ச கட்டணத்துக்கு எதிராகத்தான் முதலில் சினிமா ஸ்ட்ரைக் ஆரம்பித்தது. ஆனால் உண்மையில் இந்த வேலை நிறுத்தம் திரையரங்குகளின் அட்ராசிட்டியை கட்டுக்குள் கொண்டுவரத்தான் என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது.

Vishal firm his stand against theater owners

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், தின்பண்டங்களின் விலைகள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற சாமான்ய மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டை இந்த முறை களைந்தே தீர வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக உள்ளார். மேலும் திரையரங்குகள் வசூலாகும் தொகை பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் கணிணிமமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தத் தியேட்டர் உரிமையாளரும் ஏற்க மறுக்கிறார்.

அதாவது கள்ளக்கணக்கு காட்ட வசதியாக, தியேட்டர்களை அவர்கள் இஷ்டத்துக்கு செயல்பட விட வேண்டும் என்பது இவர்கள் வாதம். மக்கள் தியேட்டர்கள் மீதுதான் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆனால் தியேட்டர்காரர்களின் பேராசை, திருட்டுக்கணக்கு காரணமாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் படம் பார்க்கப் போகத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதாரண மக்கள் தொடர்ந்து தியேட்டர்களுக்கு வரவேண்டும். தியேட்டர்களில் அனைத்து விலைகளும் கட்டுக்குள் இருக்க வேண்டும். முன்பு இருந்தது போல ஏழை மக்களுக்கு வசதியாக குறைந்த விலை டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை அவர் தமிழக அரசிடமும் வலியுறுத்தப் போவதாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

விஷாலின் இந்தக் கோரிக்கைகளுக்கு திரைப்பட நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளம் என அனைத்துத் தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் இப்போது பிடிவாதமாக முரண்டு பிடிக்கின்றனர்.

English summary
Producers Council President Vishal has clearly told that he wouldn't withdraw the strike untill their demands fulfilled.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X