»   »  முதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்!

முதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்ப்பதாக வாக்குக் கொடுத்து விட்டதால் அந்தப் படத்தையே முதலில் பார்க்கப் போகிறேன் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, கதகளி மற்றும் கெத்து ஆகிய படங்கள் வெளியாகின்றன.


இந்நிலையில் தனது நடிப்பில் வெளியான கதகளி படத்தை தவிர்த்து முதலில் தாரை தப்பட்டை படத்தைப் பார்க்கப் போவதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து அவர் கூறும்போது "வரலட்சுமியுடன் அவர் நடித்த ‘தாரை தப்பட்டை' படத்தை முதலில் பார்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்.


எனவே தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்த்துவிட்டு, அதன்பிறகுதான் கதகளி படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.


விஷால், வரலட்சுமிக்கு அளிக்கும் முக்கியத்துவதை மீண்டும் ஒருமுறை தமிழ்த் திரையுலகினருக்கு உணர்த்தியிருக்கிறது இந்த செயல்.


English summary
"First I Watch Tharai Thappattai, Next i will go to Kathakali Special Show" Vishal says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil