»   »  டி.வி நடிகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஷால்

டி.வி நடிகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் விஜய் டி.வி-யிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் மா.கா.பா. ஆனந்த். நாளைய இயக்குனர் சீஸன் 5-ன் வெற்றியாளர் மார்டின் இயக்கத்தில் மா.கா.பா. ஆனந்த் நடித்திருக்கும் படம் 'மாணிக்'.

மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூசா குமார் நடித்திருக்கும் இப்படத்தில், இரண்டாவது கதாநாயகனாக வத்சன் நடித்திருக்கிறார். மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசை அமைக்கிறார். எம்.கே.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishal going to release the first look of Maanik

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது 'மாணிக்' படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

'மாணிக்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று விஷாலிடம் கேட்டதும், மா.பா.கா. ஆனந்த் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக தனது பணிகளுக்கு மத்தியில் சம்மதம் தெரிவித்துள்ளார். 'மாணிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற 15-ம் தேதி விஷால் வெளியிடுகிறார்.

English summary
Ma.ka.pa.Anand has acted in 'Naalaiya Iyakkunar' winner Martin's film 'Manik'. Vishal is releasing the first look of the film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil