»   »  மறைந்த அல்வா வாசு மகள் படிப்புச் செலவுக்கு விஷால் பண உதவி!

மறைந்த அல்வா வாசு மகள் படிப்புச் செலவுக்கு விஷால் பண உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் அவராலேயே நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். ரஜினியின் அருணாச்சலம், சிவாஜி படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அத்தனை நகைச்சுவைக் காட்சிகளும் அபாரமாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு அல்வா வாசு கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்பு காலமானார். திரையுலகில் பெரும் அதிர்ச்சியைத் தந்த மறைவு இது.

Vishal helps Alwa Vasu daughter

நடிகர் அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை சார்பாக அல்வா வாசு மகள் கிருஷ்ண ஜெயந்திகாவின் படிப்பு செலவிற்கு ரூபாய் 1 லட்சம் பண உதவி வழங்கியுள்ளார்.

English summary
Nadigar Sangam secretary Vishal has helped Alwa Vasu daughter's education.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil