»   »  ராஜபாளையம் மக்களுக்கு கழிப்பறை கட்ட ரூ 80,000 வழங்கிய விஷால்

ராஜபாளையம் மக்களுக்கு கழிப்பறை கட்ட ரூ 80,000 வழங்கிய விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜபாளையம் பகுதி மக்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர விரும்பிய விஷால், அதற்காக ரூ 80 ஆயிரத்தை வழங்கி இருக்கிறார்.

விஷால் தற்போது முத்தையா இயக்கத்தில் மருது படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதற்காக சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள மக்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதைத் தெரிந்து கொண்ட விஷால், அப்பகுதி நகராட்சி ஆணையர் தனலட்சுமியுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.

பின்னர் அரசு உதவியுடன் அப்பகுதி மக்களுக்கு கழிப்பறைகளை கட்டுவதென்றும், மானியத் தொகை போக மீதமிருக்கும் தொகையை படக்குழு சார்பில் அளிக்கவும் மருது படக்குழு முன்வந்தது.

முதல்கட்டமாக 10 கழிப்பறைகளை கட்ட ரூ 80 ஆயிரத்தை மருது படக்குழு நகராட்சி ஆணையர் தனலட்சுமியிடம் வழங்கி இருக்கின்றனர்.

மேலும் வருகின்ற 23 ம் தேதி ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்த்தி மீதமிருக்கும் மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர மருது படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஷால் தற்போது மருது படத்திற்காக ஐயப்ப பக்தராக மாறியிருக்கிறார்.விஷால் ஐயப்ப பக்தராக நடிக்கும் காட்சிகளை தற்போது மருது குழுவினர் படம்பிடித்து வருகின்றனர்.

விரைவில் மருது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

English summary
Actor Vishal & Marudhu Crew Helps Rajapalayam People for Construct Toilet Facility in this Village.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil