»   »  துணை நடிகர் மனைவி மருத்துவச் செலவு... சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவிய விஷால்!

துணை நடிகர் மனைவி மருத்துவச் செலவு... சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துணை நடிகர் மனைவியின் மருத்துவ செலவுக்கு தனது சொந்தப் பணம் ரூ ஒன்றரை லட்சத்தை வழங்கினார் நடிகர் விஷால்.

துணை நடிகரும் நடிகர் சங்க உறுப்பினருமான எம்ஆர் குகனின் மனைவி சூர்ய பிரபா. இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவருக்கு நரம்பு சம்பந்தமான நோய் இருப்பது தெரிய வந்தது.

Vishal helps Rs 1.50 lakh to a junior artist's wife

தினமும் ரூ.17 ஆயிரம் செலவில் 6 ஊசி மருந்துகளை செலுத்த வேண்டும், சிகிச்சைக்கும் சேர்த்து ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த தொகையை குகன் குடும்பத்தினரால் கட்ட முடியவில்லை. இந்த தகவல் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு தெரிய வந்தது.

அவர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு பேசினார். மருத்துவ செலவுக் கட்டணத்தை குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து மருத்துவ கட்டணம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரமாக குறைத்தனர் மருத்துவர்கள்.

அந்த தொகைக்கான காசோலையை விஷால் தனது அறக்கட்டளை மூலம் மருத்துவமனைக்குச் செலுத்தி சிகிச்சை தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்தார்.

English summary
Actor Vishal has aided Rs 1.53 lakh to a junior artist wife's health treatment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil