»   »  தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு ரூ 2 லட்சம் உதவிய விஷால்!

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு ரூ 2 லட்சம் உதவிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு 2 - லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரண உதவிகளைச் செய்தார் நடிகர் விஷால்.

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Vishal helps Rs 2 lakh relief material to fire affected residents

உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார். அங்கே வசித்து வந்த 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு, போர்வை, சமையலுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினர்.

Vishal helps Rs 2 lakh relief material to fire affected residents

அந்த மக்களுக்கு மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்கத் தயார் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

நேதாஜி நகர் மக்களுக்கு உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

English summary
Actor Vishal has gave Rs 2 lakh worth relief materials to fire affected Nethaji Nagar residents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil