»   »  'நூறாண்டு காலம் வாழ்க'.... பழம் பெரும் பாடகி சரளாவுக்கு உதவிய விஷால்!

'நூறாண்டு காலம் வாழ்க'.... பழம் பெரும் பாடகி சரளாவுக்கு உதவிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீப நாட்களாக ஆதரவற்று துன்பத்தில் வாடும் பழைய நடிகர்கள், கலைஞர்களைத் தேடிப் போய் உதவி வருகிறார் நடிகர் விஷால்.

முன்பு பரவை முனியம்மா, கொல்லங்குடி கருப்பாயி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள், நடிகர்களின் துயரம் அறிந்து பண உதவியும், மருத்துவ உதவியும் செய்தார்.

Vishal helps veteran playback singer Sarala

இப்போது பழைய பாடகி சரளாவுக்கு நிதி உதவியும் மருத்துவ உதவியும் செய்துள்ளார்.

ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் போன்ற படங்களில் பாடியவர் சரளா.

பேசும் தெய்வம் படத்தில் இடம்பெறும், "நூறாண்டு காலம் வாழ்க...." பாடல் ஒலிக்காத கல்யாண வீடுகளே இருக்காது.

Vishal helps veteran playback singer Sarala

இப்போது வயதான காலத்தில் சரளாவின் இரண்டு மகள்களும் அவருக்கு உதவாமல் போய்விட, அன்றாட வாழ்க்கைக்கே வழியின்றி திண்டாடி வருகிறார் என்ற செய்தியை பத்திரிக்கை வாயிலாக அறிந்த விஷால், உடனே அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

Vishal helps veteran playback singer Sarala

'உங்களுக்கு நான் இருக்கிறேன்.. கவலைப்படாதீர்கள்' என்று கூறி மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000 உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் அவருக்கு இலவச மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் விஷால்.

English summary
Actor Vishal is arranging monthly financial aid and medical treatment to veteran playback singer Sarala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil