»   »  சண்டை இன்னும் ஓயல... அடுத்து டப்பிங் கலைஞர்கள் சங்கம்... ராதாரவி பிடி தளருமா?

சண்டை இன்னும் ஓயல... அடுத்து டப்பிங் கலைஞர்கள் சங்கம்... ராதாரவி பிடி தளருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தாலும் அதன் பாதிப்பு பல சங்கங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே நடிகர் சங்க தேர்தலில் ஒருதலைப் பட்சமாக சரத்குமார் அணியை ஆதரித்தார் என்று கூறி தயாரிப்பாளர் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது. ஞானவேல் ராஜா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணியாக நிற்கின்றனர். தாணு பதவி விலகியே தீரவேண்டும் என தயாரிப்பாளரும் திமுக எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன் வற்புறுத்தியுள்ளார்.

Vishal and his team now targeting Dubbing Artists Union

இன்னொரு பக்கம் பல ஆண்டுகளாக ராதாரவியின் பிடியில் இருக்கும் தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் யூனியனிலும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இந்த சங்க உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஏற்கனவே தலைவராக இருக்கும் செல்வராஜுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சொந்தக் குரலில் பேசும் ஹீரோக்களாக இருந்தாலும் இந்தச் சங்கத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என கடுமை காட்டி வருகிறார் ராதாரவி. நடிப்பு வேறு டப்பிங் வேறு. டப்பிங் பேசும் யாராக இருந்தாலும் இந்த யூனியனில் மெம்பராக இருக்க வேண்டும் என்பது ராதாரவியின் வாதம்.

இதனை கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்ததும் அடுத்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதுதான் என்று விஷால் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இப்போது நடிகர் சங்கமே கைமாறிவிட்டதால், டப்பிப் கலைஞர்கள் சங்கத்தை இழக்காமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை ராதாரவி ஆரம்பித்துவிட்டார்.

நடிகர் சங்கம் போலல்ல டப்பிங் கலைஞர்கள் சங்கம். அங்கு இப்போதும் ராதாரவி சொல்வதுதான் வேதவாக்கு. எனவே விஷாலின் கிளர்ச்சி இங்கு செல்லுமா.. அல்லது மண்ணைக் கவ்வுமா பார்க்கலாம்.

English summary
After won the Nadigar Sangam election, Vishal and his team is now aiming to capture Dubbing artist union, presently under the control of Radharavi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil