»   »  ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைச் சிகிச்சை... தொடங்கி வைத்தார் விஷால்!

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைச் சிகிச்சை... தொடங்கி வைத்தார் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழைக் குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சை பெறும் வகையில், 'ஹார்ட் டூ ஹார்ட்' எனும் திட்டத்தை நடிகர் விஷால் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.

Vishal inaugurates free heart surgery scheme

காவேரி மருத்துவமனையும், 'மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் -100' அமைப்பும் இணைந்து "ஹார்ட் டூ ஹார்ட்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளன.

இந்தத் திட்டத்தை நடிகர் விஷால் தொடங்கி வைத்துப் பேசுகையில், "சமூக அக்கறை உள்ள இதுபோன்ற திட்டங்கள், ஏழை -எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்' என்றார்.

இந்த ஆண்டு மட்டும் 100 இருதய அறுவைச் சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

English summary
Actor Vishal has inaugurated free heart surgery scheme for poor children.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil