»   »  விஷால் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

விஷால் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Vishal issue: HC sends notice Tamil Film producers council

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷாலை சஸ்பெண்ட் செய்தது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஜ்ஜி, போன்டா பற்றி பேசினால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக பேசியதாக எடுத்துக் கொள்வதா என்று முன்பு விஷால் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai high court has sent notice to Tamil Film Producers Council in connection with Vishal's suspension from the council.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil