Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நடிகர் விஷால், கார்த்தி, நாசருக்கு கொலை மிரட்டல்..சினிமா வட்டாரத்தில் பரபரப்பு !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான ஒரு அணியும் போட்டி இட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாக்கு எண்ணிக்கைக்கு தடைவித்தார். இதனால், தேர்தலில் பதிவான வாக்குகள் தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நாசர் தலைமையிலான அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தார். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், நாசர் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக தர்மராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள துணை நடிகர் ராஜதுரை என்பவர் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மே 27-ம் தேதி ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
லத்தி
படப்பிடிப்பில்
விபத்துக்குள்ளான
விஷால்..
ஷூட்டிங்
பாதியில்
நிறுத்தம்
!
அந்த ஆடியோவில் சங்க நிர்வாகிகளை மிகவும் அசிங்கமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ராஜதுரை பேசியுள்ளார். இதனால் உடனே ராஜதுரை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தான் எங்கள் முதல் பணி அதற்காகத்தான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வென்று இருக்கும் என்று வீர வசனம் பேசினார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது எனக்கு என்ன என்று விஷாலும், அவரது குழுவும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.