»   »  வெள்ள நிவாரணப் பொருள்கள்... விஷால், கார்த்தியின் வேண்டுகோள் இது!

வெள்ள நிவாரணப் பொருள்கள்... விஷால், கார்த்தியின் வேண்டுகோள் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள நிவாரணத்துக்கு பொருட்கள் தர விரும்புவோர் எங்களிடம் தாருங்கள்.. உரிய முறையில் விநியோகித்துவிடுகிறோம் என்று நடிகர்கள் விஷால், கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி குழுவினர் அறிக்கை:

வெள்ள நிவாரண நிதிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஐதராபாத்தில் இருந்தும் பல்வேறு நிவாரண பொருட்கள் வந்து கொண்டு இருக்கிறது. வடசென்னை, கடலூர், முடிச்சூர் ஆகியவை தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி.

முடிந்ததைக் கொடுங்கள்

முடிந்ததைக் கொடுங்கள்

உங்களால் முடிந்த உதவியை இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களால் முடிந்த அளவிற்கு இப்போது அதிகம் தேவைப்படும் பொருட்களான பால் பவுடர், சானீட்டேரி நாப்கின், குடிநீர், போர்வை ஆகியவற்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவலாம். இவை தான் அப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவை.

மக்களும் உதவ முன் வர வேண்டும்

மக்களும் உதவ முன் வர வேண்டும்

உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அப்பகுதி மக்களுக்கு தற்போது கிடைத்து வருகிறது. நடிகர் மற்றும் குறிப்பிட்டவர்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இல்லை. இப்போது உதவி வரும் மக்கள் மற்றும் இளைஞர்கள் போல் மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து நிச்சயம் உதவ வேண்டும்.

லேடி ஆண்டாள் பள்ளி மையத்தில்

லேடி ஆண்டாள் பள்ளி மையத்தில்

நாங்கள் லேடி ஆண்டாள் பள்ளியை மைய பகுதியாக கொண்டு இயங்கி வருகிறோம். எல்லா பொருட்களும் இங்கே இருந்து வருகிறது. இங்கே இருந்து தான் மற்ற இடங்களுக்கு செல்கிறது. ஆதலால் உங்களிடம் எந்த பொருட்கள் இருந்தால் லேடி ஆண்டாள் பள்ளிக்கு தாங்கள் அனுப்பி வைக்கலாம்.

ரெஸ்க்யூ சென்னை

ரெஸ்க்யூ சென்னை

நாங்கள் ‘‘ரெஸ்க்யு சென்னை'' என்ற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம். எனவே அனைவரும் உடனே முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று கடலூரில்

இன்று கடலூரில்

நடிகர் விஷால், கார்த்தி மற்றும் குழுவினர் இன்று மாலை கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

English summary
Nadigar Sangam Secretary actor Vishal and Treasurer Karthi requested people to give more relief materials to their center for distributing affected people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil