»   »  சண்டக்கோழி 2: லிங்குசாமியுடன் மீண்டும் இணையும் விஷால்...வெற்றிக்காக!

சண்டக்கோழி 2: லிங்குசாமியுடன் மீண்டும் இணையும் விஷால்...வெற்றிக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டக்கோழி 2 வது பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2005 ம் ஆண்டு விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி.


இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை எடுக்க விஷால், லிங்குசாமி இருவரும் ஆர்வம் காட்டி வந்தனர்.


Vishal Once Again Team Up with Lingusamy

நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படத்தின் பணிகளில் தற்போது இருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2 வது பாகத்திலும் விஷாலே நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிப்பதாக கூறுகின்றனர்.


நாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.யுவனுக்குப் பதில், இந்த பாகத்தில் இமானை இயக்குநர் லிங்குசாமி ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.


10 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தப் படத்தைக் கையில் எடுக்கும் இயக்குநர் லிங்குசாமி இதில் வில்லனாக நடிக்க சத்யராஜை கேட்டு இருக்கின்றார் என்று முன்பு செய்திகள் வெளியாகின.


ஆனால் தற்போதைய நிலவரப்படி சத்யராஜ் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் ஆனால் அது வில்லன் வேடமா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.


கஞ்சா கருப்பிற்குப் பதில் சதீஷ் காமெடியனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Vishal- Lingusamy's Sandakozhi 2 Shooting Starts from March.Meera Jasmine is going to play an important role in Vishal's Sandakozhi sequel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil