»   »  விஷாலின் பாயும் புலி "பாய்ச்சல்" அதிகம் - ட்விட்டரில் பாராட்டும் ரசிகர்கள்

விஷாலின் பாயும் புலி "பாய்ச்சல்" அதிகம் - ட்விட்டரில் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு தடைகளைக் கடந்து இன்று வெளியாகி இருக்கும் பாயும் புலி திரைப்படம் நன்றாக இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி மற்றும் சூரி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பாயும்புலி திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


பாண்டிய நாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் சுசீந்திரன் விஷாலுடன் இணைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது, அந்த எதிர்பார்ப்பை காப்பாற்ற படம் தவறவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.


படத்தைப் பார்த்த ரசிகர்களின் ஒரு சில ட்விட்டர் கருத்துக்களை இங்கே காணலாம்.


பாயும்புலி பார்க்கலாம்

"பாயும்புலி திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம். படத்தின் முதல் பாதியை விட, 2 ம் பாதி நன்றாக இருக்கிறது. குறிப்பாக சமுத்திரக்கனி மற்றும் விஷாலின் நடிப்பு பாராட்டும் படி உள்ளது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் என்று கூறலாம். படத்தின் மாபெரும் குறை காஜலின் நடிப்பு மட்டுமே" என்று படத்தை விலாவாரியாக விமர்சித்திருக்கிறார் ஸ்ரீகர்.


விஷாலின் நடிப்பு அருமை

"பாயும்புலி திரைப்படத்தில் ரகசிய காவல்துறை அதிகாரியாக ஜெயசீலன், என்ற பெயரில் நடித்திருக்கும் விஷாலின் நடிப்பு அருமை" என்று பாராட்டியிருக்கிறார் கார்த்திகரண்.


பாயும்புலி - ஆக்க்ஷன்புலி

"பாயும் புலியில் ஆக்க்ஷன் அன்லிமிடெட் பாஸ் " என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் சுரேஷ்மோகன்.


சூரியின் நடிப்பு முடியல

விஷாலை வெட்ட வரும் வில்லன்களே அப்படியே பக்கத்தில் இருக்கும் சூரியையும் பார்த்து செஞ்சு விடுங்க உங்களுக்கு புண்ணியமாய் போகும் என்று கதறியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.


வெற்றியை வேட்டையாடும் பாயும்புலி

பாயும்புலி எல்லா திரையரங்குகளிலும் பாய்ந்து வெற்றியை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் என்று படத்தை வாழ்த்தியிருக்கிறார் ட்விட்டர் ரசிகன்.


மாஸ் இண்டர்வெல்

பாயும் புலி மாஸ் இன்டர்வெல் "எல்லாருக்கும் இதே கதிதாண்டா, எவனா இருந்தாலும் அவன போடுங்கடா" வசனம் மற்றும் சண்டைக் காட்சிகள் சூப்பர்" என்று படத்தையும், விஷாலின் நடிப்பையும் ஒருசேர பாராட்டியிருக்கிறார் ஸ்டீபன்.


பாயும்புலி என்னைக் கொன்றுவிட்டது

சூப்பர் கிளைமாக்ஸ் பாயும்புலி என்னைக் கொன்றுவிட்டது என்று படம் பார்த்த கையோடு விஷால், சுசீந்திரன் இருவரையும் கண்மூடித்தனமாக பாராட்டித் தள்ளியிருக்கிறார் சனுஜான்.


இதைப்போன்ற ஏராளமான ரசிகர்களின் வாழ்த்து மழையில் தொடர்ந்து நனைந்து கொண்டிருக்கிறது "பாயும்புலி".English summary
Vishal Krishna and Kajal Aggarwal starrer "Paayum Puli" was Released Today - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil