»   »  சினிமாவை விட சூப்பர் சாகசம்... ரவுடிகளை மடக்கிய போலீசுக்கு விஷால் பாராட்டு!

சினிமாவை விட சூப்பர் சாகசம்... ரவுடிகளை மடக்கிய போலீசுக்கு விஷால் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷாலை விரட்டுவேன்! - ஜேகே ரித்தீஷ்- வீடியோ

சென்னை: மாங்காடு அருகே 67 சமூக விரோதிகளை மடக்கிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் நடந்த ரவுடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த ரவுடிகளை போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில் பலர் போலி பத்திரிகையாளர்கள்.

Vishal praises Chennai Police

போலீஸ் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஷாலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், "துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய 67 சமூகவிரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் சர்வேஷுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்,'' என்று கூறியுள்ளார்.

English summary
Vishal has praised Chennai Police as real heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil