»   »  அச்சமின்றி ட்ரைலரை வெளியிட்டார் விஷால்!

அச்சமின்றி ட்ரைலரை வெளியிட்டார் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அச்சமின்றி படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் வெளியிட்டார்.

ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சமின்றி. கல்வி வியாபாரத்தை கதைக் களமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். வினோத்குமார் தயாரித்துள்ளார்.

Vishal releases Achamindri movie trailer

இந்தப் படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வெளியிட்டார்.

"அச்சமின்றி டீசரை இப்போதுதான் பார்த்தேன். எந்த டாபிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியதாக இப்போதுதான் சொன்னார்கள். கண்டிப்பாக இந்தப் படம் அனைவரையும் கவனிக்க வைக்கும். இந்த ட்ரைலரில் நண்பன் விஜய் வசந்தின் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு நண்பன் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்," என்றார் விஷால்.

English summary
Actor Vishal has released the Trailer of Rajapandi directed Achamindri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil