லவ் பண்ணுறேன்; ஆனா,பொண்ணு யாருன்னு கேட்காதீங்க...சஸ்பென்ஸ் வைக்கும் விஷால்

சென்னை : தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன்களுக்கு பெயர் போன ஹீரோ என்றால் அது விஷால் தான். டைரக்டராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தவர், இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராகி உள்ளார்.

சினிமாவில் மட்டுமல்ல நடிகர் சங்க தேர்தல்களிலும் அதிரடி காட்டி, தான் ஹீரோ என்பதை நிருபித்தார விஷால். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பொதுச் செயலாளர் ஆகி உள்ளார்.

சமீபத்தில் இவர் ஆந்திரா அரசியலில் குதிக்க போகிறார் என்று குட வசதிந்திகள் பரவின. ஆனால் அரசியலில் குதிக்கும் எண்ணம் எதுவும் தனக்கு கிடையாது என திட்டதட்டமாக குறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

5 மொழிகளில் ரிலீசாகும் லத்தி

5 மொழிகளில் ரிலீசாகும் லத்தி

விஷால் தற்போது புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். சுனைனாவுடன் விஷால் நடித்து வரும் லத்தி படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. 5 மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

சிகிச்சையில் இருக்கிறார் விஷால்

சிகிச்சையில் இருக்கிறார் விஷால்

சமீபத்தில் நடந்த லத்தி படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை காலில் அடிபட்டு, விஷால் வலியில் துடித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக விஷால் கேரளா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷாலுக்கு எப்போ கல்யாணம்

விஷாலுக்கு எப்போ கல்யாணம்

தற்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். நிதி பிரச்சனை, கோர்ட் வழக்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நடிகர் சங்க கட்டிட பணிகள் பாதியில் நிற்கிறது. இதை விரைவில் கட்டி முடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்

பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்

2019 ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலிப்பதாக அறிவித்த விஷாலுக்கு அவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் பிறகு காரணம் ஏதும் சொல்லாமல் அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பப்டது. இதற்கு முன் நடிகை வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

ஆமா...லவ் பண்ணுறேன்

ஆமா...லவ் பண்ணுறேன்

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஷால், அப்பா, அம்மா செஞ்சு வைக்கிற கல்யாணத்துல நான் செட் ஆவேனான்னு தெரிய. உங்க கிட்ட ஏன் பொய் சொல்லணும். எஸ்...லவ் பண்றேன். அந்த பொண்ணு யாருங்கிற கேள்விக்குக் கொஞ்சம் பொறுத்து பதில் சொல்றேன் என சஸ்பென்ஸ் வைத்து பதில் அளித்துள்ளார்.இதனால் யார் அந்த பொண்ணு என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

விஷால் தற்போது லத்தி படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆன்டனி, தான் டைரக்டராக அறிமுகமாகும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.தான் டைரக்டராகவும், நடிகராகவும் பணியாற்றும் படம் என்பதால் துப்பறிவாளன் 2 படத்தின் பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார் விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X