Just In
- 2 min ago
பாம்பாட்டம் படத்தில் குயினாக நடிக்கும் பிரபல கிளாமர் குயின்.. இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஆரம்பம்!
- 3 min ago
குப் குப்னு வியர்க்க வைக்கும் தர்ஷா குப்தா... வைரலாகும் போட்டோஸ்
- 9 min ago
கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இளம் நடிகையை மணந்தார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!
- 26 min ago
பிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன் எப்படி நடக்குது தெரியுமா..இது வரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்
Don't Miss!
- News
விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்
- Automobiles
புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்
- Sports
சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
- Lifestyle
காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா?
- Finance
சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்!
சென்னை: விஷால் நடித்துள்ள சக்ரா படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
நடிகர் விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
இதில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அனந்தன் இயக்கி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா
ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெஜினா நடிப்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தது. ஆனால், அவர் நடிக்கும் தகவல் ஏற்கனவே
வெளியாகிவிட்டன. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூரரைப் போற்று
கொரோனா காரணமாக, படங்களை சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வந்தனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், சூர்யாவின் சூரரைப் போற்று உட்பட சில படங்கள் ஓடிடியில் வெளியாயின. இந்நிலையில், சக்ரா படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது.

தியேட்டரில் ரிலீஸ்
கடந்த தீபாவளிக்கு இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தப் படம் தியேட்டரில் வெளியாவது உறுதியாக இருக்கிறது. இதைப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

ஜகமே தந்திரம்
அடுத்த மாதம் மேலும் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கின்றன. சுனைனா நடித்துள்ள ட்ரிப் படம், பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் காதலர் தினமான
பிப்ரவரி 14 அன்று வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மிருணாளினி ரவி
சக்ரா படத்தை அடுத்து நடிகர் விஷால், ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார். விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார்.