»   »  நான் காமராஜர் வழி நடப்பேன்... ஆனா கல்யாணம் பண்ணிக்குவேன்! - விஷால்

நான் காமராஜர் வழி நடப்பேன்... ஆனா கல்யாணம் பண்ணிக்குவேன்! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் காமராஜர் வழியில் நேர்மையாக நடப்பேன். ஆனால் விரைவில் லட்சுமிகரமான பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

8 ஆண்டுகள் காத்திருந்தோம்

8 ஆண்டுகள் காத்திருந்தோம்

விழாவில் விஷால் பேசுகையில், "நானும் இயக்குநர் மிஷ்கினும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று 8 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

சிம்ரனின் ரசிகன்

சிம்ரனின் ரசிகன்

துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண்டிய நாடை விட முக்கியமான படமாகும். நானும், பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது.

பைரசி திருடர்கள்

பைரசி திருடர்கள்

நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.

லட்சுமிகரமான பெண்

லட்சுமிகரமான பெண்

நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன், ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 1௦௦வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்," என்றார்.

English summary
Vishal says that he would marry a good girl very soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil