»   »  நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்துள்ள முடிவு

நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்துள்ள முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நா. முத்துக்குமார் திடீர் மரணம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதாக விஷால் ட்வீட்டியுள்ளார்.

பிரபல பாடல் ஆசிரியரான நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவரின் சில பழக்கவழக்கங்களே அவரின் உயிரை குடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முத்துக்குமார்

முத்துக்குமார்

சில பழக்க வழக்கங்களை விட முடியாமல் உயிரை விட்டுவிட்டார் முத்துக்குமார். இதனால் அவரது மனைவி, 9 வயது மகன், எதுவும் அறியா 8 மாத குழந்தை தான் தற்போது அல்லாடுகிறார்கள்.

விஷால்

முத்துக்குமாரின் மரண செய்தியை அறிந்த விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஓமைகாட். நா. முத்துக்குமார் இறந்துவிட்டார். மிகவும் வேதனையாக உள்ளது. மிகவும் இளம் வயதில் சென்றுவிட்டார். திறமையான பாடல் ஆசிரியர். மிஸ் யூ. மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம் என தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம்

கடந்த 10 ஆண்டுகளாக பிசியாக பல படங்களுக்கு பாடல் எழுதி வந்தவர் முத்துக்குமார். இந்நிலையில் வேலைப்பளுவால் ஏற்பட்ட மனஅழுத்தம் சேர்ந்து நோயாகிறது. அதனால் மன அழுத்தம் சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார் விஷால்.

உடம்பை பார்த்துக்கோங்க

உடம்பை பார்த்துக்கோங்க

மருத்துவ முகாம்கள் நடத்துவது சரி தான். ஆனால் முதலில் திரையுலகினர் சில பழக்க வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் அல்லது கட்டுப்பாட்டிலாவது வைக்க வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற மரணங்களை தடுக்க முடியும்.

English summary
Vishal thinks that it is high time to conduct medical camps after hearing lyricist Na. Muthukumar's sudden demise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil