»   »  அடுத்தடுத்து அதிரடி - விஷால் படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

அடுத்தடுத்து அதிரடி - விஷால் படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் விஷால் நடித்துள்ள முதல் மலையாளப்படம் 'வில்லன்'. மோகன்லால், ஹன்சிகா மோத்வானி, ராஷி கண்ணா, மஞ்சு வாரியார், சித்திக், ரெஞ்சி பணிக்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.உன்னி கிருஷ்ணன் இயக்கி உள்ளார்.

'வில்லன்' படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், சுஹன் ஷியாம் இசை அமைத்துள்ளார். 'லிங்கா' படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். 30 கோடியில் தயாராகியுள்ளது இந்தப் படம்.

Vishal's film confirms pongal release

இந்தப் படம் தீபாவளி அன்று வெளிவருகிறது. இதே நாளில் விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படம் தெலுங்கில் 'டிடெக்டிவ்' என்ற பெயரில் வெளிவருகிறது. இரண்டு மொழிகளிலும் விஷால் தானே டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது.

இதுதவிர, மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் மற்றொரு படமான 'இரும்புத்திரை' பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, விஷால் தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகளுக்கு மத்தியிலும் முழுவேகத்தில் நடித்துவருகிறார்.

English summary
Vishal's the first Malayalam movie is 'Villain'. 'Villain' and 'Detective' will be released on Deepavali. Vishal's another film 'Irumbuthirai' has been to be coming to Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil