»   »  ‘வேட்டையன்’ வேண்டாம்... மறுத்த விஷால்... பின்னணியில் பி.வாசு

‘வேட்டையன்’ வேண்டாம்... மறுத்த விஷால்... பின்னணியில் பி.வாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘வேட்டையன்' என்ற பெயரை தனது படத்திற்கு தலைப்பாக வைக்க வேண்டாம் என்று விஷால் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டி நாடு பட கூட்டணியான விஷால், சுசீந்திரன், இமான் ஆகியோர் மீண்டும் இணையவுள்ள படத்திற்கு முதலில் ‘காவல் கோட்டம்' என்று பெயர் வைக்க முடிவு செய்திருந்தார் சுசீந்திரன்.

2011ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலின் பெயர்தான் காவல்கோட்டம். காக்கிச் சட்டை படம் என்பதால் நாவலாசியர் வெங்கடேசனை அணுகியுள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து பாசிட்டிவான பதில் இல்லை என்பதால் படத்தில் பெயரை 'வேட்டையன்' என்று வைக்க முடிவு செய்தனர்.

ரஜினியின் வேட்டையன்

ரஜினியின் வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி. இந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் 'வேட்டையன்' என்ற கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது படத்திற்கு 'வேட்டையன்' என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்துள்ளார் சுசீந்திரன்.

பிகு பண்ணிய வாசு

பிகு பண்ணிய வாசு

சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு ஏற்கனவே வேட்டையன் என்ற பெயரை பதிவு செய்து வைத்திருப்பதாக தெரியவரவே, அவரை அணுகியுள்ளனர். முதலில் பிகு பண்ணிய பி.வாசு பின்னர் வேட்டையனை தர சம்மதம் கூறினாராம்.

கேட்ட தொகை பெரிசு

கேட்ட தொகை பெரிசு

ஆனால் அதற்கு ஈடாக அவர் கேட்ட தொகைதான் தலைசுற்ற வைத்துவிட்டதாம். அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கும் அளவிற்கு வேட்டையனில் வெயிட் இல்லை எனவே அந்த தலைப்பு வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஷால்.

புதுசா யோசிங்க பாஸ்

புதுசா யோசிங்க பாஸ்

காவல் கோட்டம், வேட்டையன் ஆகிய பெயர்கள் இல்லாமல் வேறு பெயர் யோசிங்க என்று இயக்குநர் சுசீந்திரனிடம் கூறினாராம். இதனால் என்ன தலைப்பு வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கிறாராம் சுசீந்திரன்.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

விஷால் ஏற்கனவே சத்யம், வெடி, மற்றும் ஆம்பள படங்களில் காக்கி சட்டை போட்டு நடித்துள்ளார். விஷால் காக்கிச்சட்டை மாட்டிய படங்கள் எல்லாமே சுமார் ரகமாகத்தான் ஓடியது. எனவே இந்த படமாவது சூப்பர் ரகமாக அமையவேண்டும் என்பதால் சூப்பர் தலைப்பாக வைக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளார் சுசீந்திரன்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனிக்கின்றார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் வேந்தர் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

வஞ்சம் தீர்த்தாரா வாசு

வஞ்சம் தீர்த்தாரா வாசு

அது சரி வேட்டையனை விட்டுத்தர ஏன் வாசு இப்படி பிகு பண்ணினார் என்று விசாரித்தால் சி.சி.எல் போட்டிகளில் தனது மகனை புறக்கணித்த விஷாலை காத்திருந்து கடுப்படித்துவிட்டார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
After Pandiya Nadu, Vishal and Suseenthiran will be joining hands once again. There was news that this film has been titled Vettaiyan. The crew has denied this news. They have mentioned that the title of the film will be announced once it has been finalized.
Please Wait while comments are loading...