»   »  நாளை கதகளி... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

நாளை கதகளி... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலின் பொங்கல் வெளியீடான கதகளி இசை வெளியீட்டு விழா நாளை அமர்க்களமாக வெளியாகிறது.

தனது ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும்போதும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுச் செய்யும் வழக்கத்தை பாண்டிய நாடு படத்திலிருந்து கடைப்பிடித்து வருகிறார் விஷால்.


Vishal's Kathakali audio from tomorrow

இந்தக கதகளி படத்தை ஆரம்பிக்கும்போதே பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார். மழை வெள்ளம், வெள்ள நிவாரணப் பணிகள் என பிஸியாக இருந்தாலும், கதகளியின் அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீசுக்கு தயாராகிவிட்டார்கள் விஷாலும் படத்தின் இயக்குநர் பாண்டி ராஜும்.


நாளை இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. "விஷாலின் கதகளி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என விளம்பரப்படுத்தி வருகின்றனர்.


படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஜனவரி 14-ம் தேதி படம் வெளியாகிறது.


கதகளி- டிரெய்லர்

English summary
Vishal's Pandiraj directed Kathakali audio launch will be held on Dec 24th Tomorrow in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil