»   »  அமைதி பாண்டிராஜ்... ஆக்ரோஷ விஷால் இணைந்து ஆடிய கதகளி

அமைதி பாண்டிராஜ்... ஆக்ரோஷ விஷால் இணைந்து ஆடிய கதகளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு எந்த படம் போகலாம் என்று யோசித்து கடைசியில் விஷால் நடித்த கதகளிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. பசங்க எடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் விஷாலா? எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்புடனேயே தியேட்டருக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் கதகளி ஆட்டத்தை கொடுத்திருக்கிறார்.

கடலூரின் கடல் அழகு... கதகளியில் விஷாலின் கம்பீரம் அழகு என்பது போல உள்ளது. சண்டைக்கோழி, திமிரு, பாண்டியநாடு படத்திற்கு பிறகு தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைத்திருக்கிறார் விஷால்.


வில்லனுக்கு எதிராக வெற்று கூச்சலில்லை... அமைதியாய் நடித்து வில்லன்களை ஆக்ரோஷமாய் கதகளி ஆடியிருக்கிறார். ஆம்பள படத்தைப் போல அல்லாமல் அதே நேரத்தில் தனி ஒருவன் போலவும் இல்லாமல் ஹிப் ஹாப் தமிழா இதில் பாடல்களில் சுமார்தான். பின்னணி இசை கதகளிக்கு ஏற்ற மிரட்டல்தான்.


கொலை சஸ்பென்ஸ்

கொலை சஸ்பென்ஸ்

மச்சினன்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் மீனவர் சங்கத்தலைவர் தம்பா, அவரது மனைவியாக லட்சுமி ராமகிருஷ்ணன், வில்லனை கொலை செய்ய திட்டமிடும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரை கொன்றது யார் என்ற சஸ்பென்ஸ் உடன் கதையை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.


காதலுக்கு பிளாஸ்பேக்

காதலுக்கு பிளாஸ்பேக்

அமெரிக்காவில் இருந்து திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பும் விஷால், தன் காதலித்தது எப்படி என்று நண்பர்களுக்கு சொல்லும் பிளாஷ்பேக் கொஞ்சம் வித்தியாசமான பிளாஷ்பேக்... அதேபோல தம்பாவிற்கும் விஷால் குடும்பத்திற்கும் இடையேயான பகையை சொன்ன விதமும் சூப்பர் ரகம்.


இயக்குநர் டச்

இயக்குநர் டச்

சாதாரண பழிவாங்கல் கதையைப் போல இல்லாமல் சற்றே வித்தியாசமாக ஒரு ஆக்சன் கதையை கொடுத்துள்ளார் பாண்டிராஜ்.தம்பாவை கொலை செய்ய ஆள் செட்டப் செய்து விட்டு பொய் வழக்குப் போட்டு விஷாலை இந்த வழக்கில் கோர்த்து விட திட்டமிடும் இன்ஸ்பெக்டர் இந்த படத்திற்கு சரியான பொருத்தம்.


அடியாட்களுடன் செல்ஃபி

அடியாட்களுடன் செல்ஃபி

படத்தில் விஷாலின் ஆக்ரோஷம் நிறைந்த காட்சி, ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்துவிடுகிறது அந்தளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் பாண்டிராஜ். அடிக்க ஆள் அனுப்பும் வில்லன் விஷாலின் படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்ல... ஆனால் அடியாட்களை அடித்து துவம்சம் செய்து செல்ஃபி எடுத்து வில்லனுக்கு அனுப்புவது செம டுவிஸ்ட்.


கட்டிப்போடும் கதை

கட்டிப்போடும் கதை

திருவிழா பாட்டு, ஒரே ஒரு டூயட் பாட்டு என இடைவேளைக்கு முன்பும்.. இடைவேளைக்குப் பிறகு பாடல்களே இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாக படம் நகர்வதால் ரசிகர்களை நகரவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறது.


இது விஷாலின் கதகளி

இது விஷாலின் கதகளி

ஆம்பள, பாயும்புலி படங்களில் ஏமாற்றிய விஷால் கதகளி படத்தில் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திக்கிறார். ரவுடியின் மனைவியாக லட்சுமி ராமகிருஷ்ணன், டெக்ஸ்டைல் ஓனராக ஜெயப்பிரகாஷ் என அறிமுகமான முகங்களும் நடித்திருக்கின்றனர்.


கேதரீன் தெரஸா

கேதரீன் தெரஸா

மீனு குட்டியாக வரும் கேத்ரீன் தெரஸா... மெட்ராஸ் படத்தில் பார்த்ததை விட முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. கொஞ்சல் பேச்சு... விஷாலுடன் ரொமான்ஸ் என சில சீன்கள் மட்டுமே நடித்திருக்கிறார்.


திரைக்கதை ஹீரோ

திரைக்கதை ஹீரோ

மிக நேர்த்தியான ஒரு ஸ்கிரீன் ப்ளேயை கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். படத்தின் மிகப்பெரும் வெற்றியே திரைக்கதை தான். அதை சரியாக கையாண்டிருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். படத்தில் ரசிகர்கள் அடுத்து என்ன என்று அவர்களை சிந்திக்க வேண்டிய காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. பாக்கியராஜ் சிஸ்யர் என்பதை நிரூபித்திருக்கிறார்.


இயக்குநருக்கு கிடைத்த வெற்றி

இயக்குநருக்கு கிடைத்த வெற்றி

விஷாலின் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, திருமணம் நடக்குமா? நடக்காதா? யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என ஆடியன்ஸுக்கு சஸ்பென்ஸ் வைத்ததிலேயே பாண்டிராஜ் ஜெயித்துவிட்டார். பசங்களை வைத்து இயக்கிய பாண்டிராஜ் விஷாலை வைத்து அருமையான ஆக்‌ஷன் படம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.


English summary
A Vishal starrer has to have a larger-than-life character and a script that rolls beyond the frames of logic and reason, and much of what unfolds in Pandiraj-helmed Kathakali is well outside the realm of plausibility.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil