»   »  வந்துட்டார்னு சொல்லு விஷாலும் தீபாவளி ரேஸுக்கு வந்துட்டார்னு சொல்லு

வந்துட்டார்னு சொல்லு விஷாலும் தீபாவளி ரேஸுக்கு வந்துட்டார்னு சொல்லு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்து வரும் கத்தி சண்டை படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் கத்தி சண்டை. இந்த படத்தில் சூரி, வடிவேலு என்று இரு நகைக்சுவை நடிகர்கள் இருப்பதால் சிரிப்பு சரவெடிக்கு பஞ்சம் இருக்காது.

அதிலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி பெண் வேடத்தில் இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. நம்ம சூரியா அழகாத் தான் இருக்காரு என்கிறார்கள்.

தீபாவளி

தீபாவளி

கத்தி சண்டை படத்தின் வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிட்ட கையோடு #KathiSandai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

கொடி, காஷ்மோரா

கொடி, காஷ்மோரா

ஏற்கனவே கார்த்தியின் காஷ்மோரா, தனுஷின் கொடி படங்கள் ஆகியவையும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபாவளி ரேஸில் விஷாலும் சேர்ந்துள்ளார்.

எஸ்.3

எஸ்.3

தீபாவளி ரேஸில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எஸ்.3 படமும் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஓங்கி அடிச்சா மூன்றரை டன் வெயிட்டும் தீபாவளி ரேஸில் சேர்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் ஹரி அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

காஷ்மோரா

காஷ்மோரா

காஷ்மோராவின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர். பிரபுவிடம் எஸ்.3 ரிலீஸ் பற்றி கேட்டதற்கு, எங்கள் படம் தீபாவளி ரிலீஸ் தான். எஸ்.3 தீபாவளிக்கு ரிலீஸாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அறிவிப்பு வந்தால் பார்க்கலாம் என்றார்.

English summary
Vishal's Kathi Sandai will hit screens as Diwali special. Karthi's Kashmora, Dhanush's Kodi are also in the diwali race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil