இதென்னா புது ட்விஸ்ட்...விஷாலின் லத்தி ரிலீஸ் தள்ளிபோகிறது...உறுதியானது சிம்பு - விஷால் மோதல்

சென்னை : டைரக்டர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் லத்தி என்ற டைட்டிலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Vishals Laththi release postponed and clash with Simbus VTK

ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.

விஷால் போலீசாக நடித்துள்ள மற்றொரு படம். விஷாலின் ஆக்ஷன் லுக், ரத்த காயங்களுடன் இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. லத்தி படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது விஷாலுக்கு காலில் 3 முறை காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விஷால் வலியில் துடித்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட, வாயில் பெரிய கயிறு ஒன்றை கடித்த படி, சிரித்துக் கொண்டிருக்கும் விஷாலின் போஸ்டர் படத்தின் மீதான ஆர்வத்தை துண்டி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஷால் ஒரு முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் செகண்ட்ஆஃபில் 45 நிமிடங்கள் ஆக்ஷன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாம். இந்த படத்திற்கு திலிப்கு சுப்பராயன் ஸ்டன்ட் அமைத்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இதற்காக ப்ரொமோஷன் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட லத்தி படத்தை செப்டம்பர் 15 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்களாம்.

அதாவது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகும் அதே நாளில் விஷாலின் லத்தி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. லத்தி படத்தின் ரிலீசை ஏன் ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளார்கள். ஆகஸ்ட் 12 லத்தி பட ரிலீஸ் இல்லையென்றால், அந்த நாளில் வேறு ஏதாவது படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X