Don't Miss!
- News
காதலி கையால் கிண்டிக் கொடுத்தால்.. உப்புமாகூட.. ஸவர்மா மாதிரி செம டேஸ்ட்டா இருக்கும் பாஸ்!
- Finance
சுந்தர் பிச்சையை பணி நீக்கம் செய்யுங்கள்.. கூகுளின் பணி நீக்க அறிவிப்பால் பரவும் கருத்துகள்!
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Laththi Review: விஷாலுக்கு இந்த படமாவது கைகொடுத்ததா? எப்படி இருக்கு லத்தி?
சென்னை: இந்த ஆண்டு இறுதியிலாவது எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என கடின உழைப்பு போட்டு நடித்துள்ள நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாராவின் கனெக்ட் மற்றும் விஷாலின் லத்தி படங்களுக்கு இடையே தான் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இரண்டு படங்களுக்கு ஹாலிவுட் படமான அவதார் 2வும் கடும் போட்டி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷால் எதிர்பார்த்த வெற்றியை லத்தி படம் கொடுத்ததா இல்லையா என்கிற ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
இந்த
வாரம்
தியேட்டரில்
வெளியாகும்
லத்தி,
கனெக்ட்...
ரசிகர்கள்
எதிர்பார்க்கும்
படம்
இதுதானா?

விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு வெளியான பல படங்கள் சுமார் மற்றும் சொதப்பல் ரகம் தான். இந்த ஆண்டு வெளியான வீரமே வாகை சூடவா கூட வாகை சூடவில்லை. இந்நிலையில், லத்தி படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார் நடிகர் விஷால்.

கை கொடுக்கவில்லை
ஆனால், நடிகர் விஷாலுக்கு லத்தி படம் பெரிதாக கைகொடுக்கவே இல்லை என்று தான் நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். திரைக்கதையில் எந்தவொரு புது முயற்சியும் இல்லாமல் பழைய ஸ்டீரியோ டைப் கதையை மீண்டும் தூசி தட்டி நடித்திருக்கிறார் விஷால் என்றும் 2.5 ஸ்டார்கள் தான் இந்த படத்துக்கு என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் வின்னர்
கனெக்ட் திரைப்படமும் ரசிகர்களுக்கு பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், இந்த கிறிஸ்துமஸ் வின்னர் விஷாலின் லத்தி தான் என அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கடைசி 40 நிமிடங்கள் விஷால் படத்துக்காக போட்டுள்ள உழைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சுனைனா சூப்பர்
லத்தி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்துள்ள நடிகை சுனைனாவின் நடிப்பு சூப்பர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வந்தேன். ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம். யுவன் இசையால் மிரட்டி விட்டுருக்காரு.. நிச்சயம் பார்க்கலாம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

ஸ்க்ரிப்ட் செலக்ஷன் சரியில்லை
லத்தி படத்திற்காக கடும் உழைப்பை நடிகர் விஷால் போட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. சண்டைக் காட்சிகள் படத்தில் அபாரம். ஆனால், ஸ்க்ரிப்ட் செலக்ஷனில் இன்னமும் நடிகர் விஷால் பெரியளவில் கோட்டை விட்டு வருவது இந்த லத்தி படத்திலும் அபத்தமாக தெரிகிறது. வசனங்கள் மற்றும் திரைக்கதை நல்லா இருந்தா படம் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.