அப்பா இது கைதி 2 போஸ்டர்ப்பா.. பிறந்தநாளில் மார்க் ஆண்டனி விஷாலை வச்சு செய்யும் பாட்ஷாக்கள்!

சென்னை: நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

கார்த்தியின் கைதி 2 போஸ்டர் போல இருக்கு என்றும் விஷால் சார் உங்க போஸ்டர் எப்போ வரும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஷால் பர்த்டே ட்ரீட்

விஷால் பர்த்டே ட்ரீட்

1977ம் ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்த நடிகர் விஷால் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லத்தி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் விஷால். பிறந்தநாளை முன்னிட்டு விஷால் ரசிகர்களுக்காக மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால், அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஷால் படம் மாதிரியே தெரியல என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கெட்டப் மாற்றினாலும்

கெட்டப் மாற்றினாலும்

அவன் இவன் படத்துக்கு பிறகு எந்தவொரு கெட்டப் சேஞ்சும் செய்யாமல் ஒரே மாதிரியாக போலீஸ், மிலிட்டரி போன்ற கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்தார் விஷால். அதில் சில படங்களை தவிர பல படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில், விஷால் சற்றே கெட்டப்பை மாற்றி நடிக்க நினைத்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்காக வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

கார்த்தி மாதிரி இருக்கு

கார்த்தி மாதிரி இருக்கு

விஷால் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி மார்க் ஆண்டனி போஸ்டரை மாஸாக இருக்கு என பாராட்டி வரும் நிலையில், மோசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது. இதில், இருப்பது விஷால் மாதிரியே தெரியல.. பருத்திவீரன் கார்த்தி மாதிரி இருக்கு என இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.

ஒட்டுத் தாடி, டோப்பா

ஒட்டுத் தாடி, டோப்பா

சிம்புவை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் அடங்காதவன் அன்பானவன் அசராதவன் பண்ணதை போல உங்களை வைத்து செய்து விட்டாரா என்றும், ஒட்டுத் தாடி, டோப்பா எல்லாம் வைத்து ரொம்பவே வொர்ஸ்ட்டா இருக்கு விஷால் என பிறந்தநாள் என்றும் பாராமல் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கைதி 2 போஸ்டர்

கைதி 2 போஸ்டர்

அப்பா இது மார்க் ஆண்டனி போஸ்டர் இல்லப்பா, கைதி 2 போஸ்டர்ப்பா.. லோகேஷ் கனகராஜ் அதுக்குள்ள கைதி 2வை ஆரம்பிச்சிட்டாரா என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், துப்பாக்கி காய்ச்சல் விஷாலுக்கும் வந்து விட்டது போல, துப்பாக்கியை வைத்து சுட்டால் படம் ஹிட்டாகும் என நினைக்கிறாரா என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். இப்பவே ட்ரோல் பண்ணக் கூடாது, படம் வரட்டும் அது வரைக்கும் வெயிட் பண்ணலாமே அவர் இப்போ தான் கெட்டப் சேஞ்சுக்கே வந்துருக்காரு என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X