இத விஷால்ன்னு சொன்னா அவரே நம்பமாட்டார்... மார்க் ஆண்டனி அப்டேட்டும் ரசிகர்களின் ரியாக்ஷனும்
சென்னை: விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.
விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாராப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் மார்க் ஆண்டனி
விஷாலின் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் விஷால். இந்நிலையில் தான் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தை ரசிக்ர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி, பக்கா கேங்ஸ்டர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

டபுள் தமாக்கா
இந்தப் படத்தில் விஷால் இதுவரை நடித்திடாத கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அவர் மட்டும் இல்லாமல் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் இந்தப் படத்தை தனது கேரியரில் பெஸ்ட்டாக இருக்கும் என அதிகமாக நம்பியுள்ளார். மேலும், இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஷால் மார்க் ஆண்டனி கேரக்டரிலும் எஸ்ஜே சூர்யா ஜாக்கி பாண்டியனாகவும் தரமான ஆக்ஷன் ட்ரீட் கொடுக்க காத்திருக்கின்றனர்.

அப்டேட் கொடுத்த படக்குழு
மார்க் ஆண்டனி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல், படம் குறித்த எந்த அப்டேட்டும் அதிகம் வெளியாகவே இல்லை. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரின் போஸ்டர் மட்டுமே வெளியாகியிருந்தது. இறுதியாக சில தினங்களுக்கு முன்னர், புஷ்பா படத்தில் மங்களம் சீனுவாக நடித்த சுனில், மார்க் ஆண்டனியிலும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது படக்குழு.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மார்க் ஆண்டனி
இந்த அப்டேட்டின் படி மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில் ஆகியோர் இருக்கும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் அடர்த்தியான தாடி, ஹேர் ஸ்டைலுடன் விஷாலும், முறுக்கிய மீசை பெல்பாட்டம் பேண்ட்டுடன் எஸ்ஜே சூர்யாவும் மிரட்டலாக உள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் இது விஷால்ன்னு சொன்னா அவரே நம்ப மாட்டார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், போஸ்டரை போல படமும் வித்தியாசமாக இருக்குமா எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். விஷால் - எஸ்ஜே சூர்யா காம்போவில் மார்க் ஆண்டனி ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











