»   »  இன்று விஷாலின் மருது ரிலீஸ்... திருட்டு டிவிடியும் ரிலீசாகுதாமே!

இன்று விஷாலின் மருது ரிலீஸ்... திருட்டு டிவிடியும் ரிலீசாகுதாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் நடித்துள்ள மருது படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

முத்தையா இயக்கத்தில் விஷால் - ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் மருது. கிராமத்து ஆக்ஷன் பொழுது போக்குப் படமான மருது, பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில் கிட்டத்தட்ட சோலோவாக வெளியாகிறது.


Vishal's Marudhu to hi screens

இந்தப் படத்தின் வெற்றியை விஷால் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கிறார். காரணம் பாண்டியநாடு படத்துக்குப் பிறகு அவரது படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத குறையை மருது ஈடுகட்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்.


இதற்கிடையில் மருது படத்தின் திருட்டு டிவிடி இன்றே வெளியாகிவிடும் வாய்ப்புள்ளதாக விஷால் கூறியுள்ளார்.


Vishal's Marudhu to hi screens

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாளை வெளியாகவிருக்கும் என்னுடைய மருது படமாவது தப்பித்திருக்கும். நான் அடித்துக் கூறுகிறேன், மருது படத்திற்கான திருட்டு டிவிடி, படம் ரிலீஸாகும் வெள்ளிக்கிழமையே கடைகளுக்கு வந்துவிடும்.


மருது படத்திற்கான டிவிடி, அதற்கான ரேப்பர் எல்லாம் ரெடியாகிவிட்டது, எங்கே ரெடியாகிறது என்பது வரைக்கும் எனக்குத் தெரியும். நாளை திருட்டு டிவிடி வந்ததும், நானே உங்களுக்குக் கொடுத்து அனுப்புகிறேன். என் படம் மட்டுமல்ல, இனி வரும் படங்களையாவது திருட்டு டிவிடி கும்பலிலிருந்து காப்பாற்றவேண்டும்," என்று கூறியுள்ளார்.

English summary
Amidst video piracy issues, Vishal's Marudhu movie is releasing all over the state today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil