»   »  கால் வலியால் துடித்த விஷால்.. நாட்டு மருந்து போட்டு நீவி விட்டு சரிப்படுத்திய பாட்டிகள்!

கால் வலியால் துடித்த விஷால்.. நாட்டு மருந்து போட்டு நீவி விட்டு சரிப்படுத்திய பாட்டிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மருது படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட, உடனே அங்கிருந்த பாட்டிகள் பாரம்பரிய சிகிச்சை அளித்து அவரின் வலியைப் போக்கியிருக்கின்றனர்.

விஷால் தற்போது முத்தையாவின் மருது படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ், ராதாரவி, சூரி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Vishal's Marudhu Shooting Spot

இந்நிலையில் ராஜபாளையத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் நடிகர் விஷாலுக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட வலியால் துடித்துப் போயிருக்கிறார்.

விஷாலின் நிலையைக் கண்ட அங்கிருந்த கிராமத்துப் பாட்டிகள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளித்து அவரின் வலியைப் போக்கியுள்ளனர்.

இந்த சிகிச்சையால் காலில் ஏற்பட்ட வலி விஷாலுக்கு நீங்க அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.தற்போதைய நிலவரப்படி மருது படம் ஏறக்குறைய முடிந்து விட்டதாக விஷால் கூறியிருக்கிறார்.

மேலும் அரசின் உதவியுடன் அப்பகுதி மக்களுக்கு இலவச கழிப்பறைகளை மருது படக்குழுவினருடன் இணைந்து கட்டித்தர உள்ளதாகவும் விஷால் தெரிவித்து இருக்கிறார்.

சண்டைக்கோழி போல ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் மருது படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். முதன்முறையாக தனது பேவரைட் நடிகை லட்சுமி மேனன் இன்றி ஒரு படத்தை இயக்குநர் முத்தையா எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Marudhu Climax Shooting now Wrapped Up. Vishal Tweeted "climax shoot of #marudhu wrapped up.Kickass.Happy.Injured. Movie almost dne.AnlArasuMuthiahstudio9_sureshMuthiah".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil