»   »  மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்

மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் கத்திச் சண்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு தனது நண்பன் கார்த்தியின் காஷ்மோரா ரிலீஸானதால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் விஷால்.

Vishal's movie to clash with Vijay's this pongal

அதன் பிறகு நவம்பர் 18ம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. இதற்கிடையே மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் கத்திச் சண்டை உள்பட பல படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது.

இப்படி கத்திச் சண்டை ரிலீஸ் தேதி தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் கத்திச் சண்டை படம் பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீஸாகும் என விஷால் அறிவித்துள்ளார்.

பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் ரிலீஸாகிறது. முன்னதாக இரண்டு முறை விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. 2007ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் போக்கிரியும், விஷாலின் தாமிரபரணியும் மோதின.

இதையடுத்து 2014ம் ஆண்டு தீபாவளியின்போது கத்தியும், பூஜை படங்களும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal's Kaththi Sandai is hitting the screens for Pongal. It is noted that Vijay's Bairavaa is also a Pongal release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil