சூரியை அறைந்தது பெரிய பிரச்சினை ஆகிவிட்டது..விஷால் சொன்ன பகீர் தகவல்
சென்னை : நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் 'ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா' என படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சினிமாவில் நான் சம்பாதித்த சொத்து ரோபோ ஷங்கர் மற்றும் சூரி போன்றோர்கள் தான். என்னை சிரிக்க வைப்பது இவர்கள் தான். நாங்கள் எப்போதும் அடித்துக் கொண்டு தான் விளையாடுவோம். ஒரு முறை நான் சூரியை அறைந்துவிட்டேன் என நினைத்து, சங்க பொறுப்பு வந்ததும் விஷால்Arrogant ஆகிறான் என்றார்கள். அவர்களிடம் நாங்கள் விளையாடினோம் என்பதை புரியவைப்பதே போராட்டமாகிவிட்டது.

பீட்டர் ஹெயின் என்னைப் பார்த்து பயந்தேன் என்று கூறினார். ஆனால், நாங்கள் தான் அவரைப் பார்த்து பயந்தோம். படம் ஆரம்பித்தது தான் நாங்கள். ஆனால், முடித்தது பீட்டர் ஹெயின் தான். என்னுடைய ஆசையைத் தீர்க்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகன் என்று நினைத்து நடிக்கவில்லை. சண்டை இயக்குனராக நினைத்துக் கொண்டு தான் நடித்தேன்.
அவன்-இவன் படத்தில் நான் நடித்த பின்பு தான் என்னுடைய நடிப்பின் மீதான மரியாதை கிடைத்தது. அந்த படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதே போல் இந்த படத்தில் இயக்குநர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார்.
அப்போது ரமணா மற்றும் நந்தாவிடம் 12 கேமராக்கள் வைத்துவிடுங்கள். நான் என்ன நடிக்க போகிறேன், எப்படி நடிக்க போகிறேன் என்று தெரியாது. மீண்டும் அதை நடிக்க முடியுமா என்றும் தெரியாது என்றேன். அதே போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இது போன்ற வாய்ப்புகள் தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும். இவ்வாறு விஷால் பேசினார்.


Click it and Unblock the Notifications











