»   »  செயலாலர், தலைவர்... அடுத்தது கோட்டைதான்!!

செயலாலர், தலைவர்... அடுத்தது கோட்டைதான்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா இருந்தவரை சினிமாத்துறையினர் அரசியல் பக்கம் எட்டிப் பார்க்கவோ கருத்து சொல்லவோ கூட பயந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளாளுக்கு அரசியல் பேசவும் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கவும் ஆசைப்படுகிறார்கள். விஷாலுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன!

Vishal's politics

விஷால் நடிகர் சங்க செயலாளராக பதவியேற்றபோது நாங்கள் இனிமேல் காவிரி போன்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மாட்டோம், போராட மாட்டோம் என்றார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு திரண்ட கூட்டத்தை பார்த்ததும் களத்தில் இறங்கிவிட்டார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி வரை போய், மத்திய நிதி அமைச்சரையெல்லாம் பார்த்துவிட்டு வந்தார். நேற்று ஆர்கே நகர் தேர்தல் ரத்து பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதாவது யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தேர்தலை ரத்து செய்திருக்கக் கூடாதாம்.

இது உங்களுக்கு நேர் எதிரான கருத்து என்று ஆளுங்கட்சி மேலிடத்துக்கு நோட் போயிருக்கிறது.

எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணித்தான் பண்றாரோ...?

English summary
After his consecutive wins in Nadigar Sangam and Producers Council, actor Vishal is now slowly trying to enter in state politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil