Laththi Teaser: ஒரே ஆளாக ஒட்டுமொத்த ரவுடி கேங்கையும் காலி பண்ணப் போறாரா விஷால்.. முடியல பாஸ்!

சென்னை: முதல் ஷாட்டிலேயே கான்ஸ்டபிளான நடிகர் விஷாலை ரவுடிகள் கட்டிவைத்து அடிக்கின்றனர். ரத்த வெள்ளத்தில் விஷால் பேசும் பஞ்ச் டயலாக் உடன் ஆரம்பமாகவும் லத்தி டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

எ வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

சைக்கிளில் வந்த விஷால்

சைக்கிளில் வந்த விஷால்

சியான் 61 படத்தின் பூஜைக்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்ததை போலவே, லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஓட்டுப் போட நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து சைக்கிளில் வந்தது. நடிகர் அஜித் சைக்கிளில் சுற்றிய புகைப்படங்கள் டிரெண்டானது. முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் வலம் வந்த புகைப்படங்கள் வெளியானது என சமீப காலமாக சைக்கிள் எளிமையின் அடையாளமாக மாறி செம டிரெண்டாகி வருகிறது.

காக்கிச் சட்டை அணிந்து

காக்கிச் சட்டை அணிந்து

மேலும், லத்தி டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் காக்கிச் சட்டை அணிந்து கான்ஸ்டபிள் கெட்டப்பில் மேடைக்கு வந்தார். அவர் கையில் லத்தி கொடுக்கப்பட்ட நிலையில், அதனை தாறூமாறாக சுற்ற அவரது நண்பர்களும் படத்தின் தயாரிப்பாளர்களுமான ரமணா மற்றும் நந்தா கைகளை தட்டிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

லத்தி டீசர்

லத்தி டீசர்

இயக்குநர் ஏ. வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி படத்தின் டீசரை சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால். ஆக்‌ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும் என தொடர்ந்து விஷால் பல படங்கள் நடித்து தள்ளினாலும், எந்த படமும் சிறப்பாக ஓடவில்லை. லத்தி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மிகுந்த மெனக்கெடல் போட்டுள்ள நிலையில், இந்த படத்தை ரொம்பவே நம்பி இருக்கிறார் விஷால்.

தனி ஒருவன்

தனி ஒருவன்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரு பெரிய கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து காலி செய்யப் போகிறார் விஷால் என்பது டீசரிலேயே தெரியப்படுத்தி விட்டனர். பொறுக்கி உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா, போலீஸ் என்க்கு எவ்வளவு திமிரு இருக்கும் என மீண்டும் நானும் மதுரைக்காரன்டா டோனில் விஷால் பேசும் பஞ்ச் டயலாக்கு தான் பயத்தை கிளப்புகிறது. ஒரே ஹீரோ ஒட்டுமொத்த கூட்டத்தையும் அடித்துக் காலி செய்யும் கதை இன்னும் எத்தனை தான் வரும் என்றே தெரியவில்லை.

பீட்டர் ஹெயின் இருக்காரு

விஷாலின் லத்தி படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் மாஸ்டர் என்பதால், நிச்சயம் ஸ்டன்ட் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு ஏற்றார்போல திரைக்கதையும் அமைந்து விட்டால், நிச்சயம் இந்த படம் இரும்புத்திரை படத்திற்கு பிறகு விஷாலுக்கு ஒரு பிளாக்பஸ்டராக அமையவும் வாய்ப்புகள் உள்ளன. வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X