»   »  சென்சார் முறையில் மாற்றம் வேண்டும்... விஷால் கோரிக்கை

சென்சார் முறையில் மாற்றம் வேண்டும்... விஷால் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்படங்களை சென்சார் செய்யும் முறையில் மாற்றம் வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுசெயளாளருமான விஷால் கூறுகையில், "இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமை படுத்த வேண்டும் என தணிக்கை குழு தலைவர் மதியழகனைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.

Vishal's request to Censor board

திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தணிக்கை சான்றிதழ்க்கு அனுப்புவதால்தான் படங்கள் ரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தால் மட்டுமே திரைப்படம் வெளியாகும் போது எந்த வித தடங்களும் இல்லாமல் வெளியாகும். அதன் தொடர்பாக கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.

மேலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக தமிழ்திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது, இது சினிமா துறைக்கு பெறும் இழப்பு. இதனைக் குறைக்க மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் கமலஹாசனின் கையெழுத்திட்ட கடிதத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளோம்," என்றார்.

English summary
Producers Council President Vishal has urged regional censor board officer to change the deadline for censorship for movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil