»   »  சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்

சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால், லிங்குசாமி இணையும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ் கிரண் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படம் ஹிட்டானது. இதையடுத்து இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கிறார்கள்.

Vishal's Sandakozhi 2 on floors in february

அறிவிப்பு வெளியிட்டு பல காலம் ஆகியபோதிலும் பட வேலைகளை அடுத்த மாதம் துவங்குகிறார்கள். பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கும் திட்டமும் வைத்துள்ளார் லிங்குசாமி.

பிப்ரவரி மாதம் நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகை குஷ்புவை வெற்றியடையச் செய்வதில் விஷால் தீவிரமாக உள்ளார். குஷ்புவும் விஷால் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

English summary
Vishal, Lingisamy's much awaited project Sandakozhi 2 will go on floors from the third week of february.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil