»   »  நல்லா போய்க்கிட்டிருக்கும்போதே யு டர்ன் போடும் விஷால்...!

நல்லா போய்க்கிட்டிருக்கும்போதே யு டர்ன் போடும் விஷால்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்?- வீடியோ

துப்பறிவாளனுக்கு கிடைத்த பாசிட்டிவ் வைப்ரேஷன், ஆர்கே நகர் தேர்தல் வேட்பு மனு, அரசியல் எண்ட்ரி என்று விஷால் வேகமெடுத்த ஆண்டு 2017. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது 2018 இன் தொடக்கமே...

பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருந்த இரும்புத்திரை படம் தள்ளி போய் தள்ளி போய் மார்ச் 29க்கு சென்றிருக்கிறது. இரும்புத்திரையை பெரிதும் நம்பியிருக்கிறார் விஷால். ஆனால் தேதி கிடைக்காமலும் டப்பிங் முடியாமலும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

Vishal's secret Political plans

இன்னொரு பக்கம் அரசியலில் ரஜினியும் கமலும் வேகமெடுக்க, பின் தங்குகிறார் விஷால். போதாதக்குறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் முதல் முதல் அமைச்சர் ஓமந்தூரார் பிறந்த நாளுக்கு அவரது சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டுள்ளார். இது நல்ல விஷயம்தானே என்று கேட்கிறீர்களா? விஷால் ரெட்டி இனத்தை சேர்ந்தவர். ஓமந்தூராரும் ரெட்டிதான்.

ஒரு நடிகராக எல்லோருக்கும் பொதுவானவராக அறியப்பட்ட விஷால் இப்போது பாதை மாறுவது அவரது ஆதரவாளர்கள் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பேசும்போது நான் ரெட்டியாக வரவில்லை. ரெட்டி என்று சொன்னால் நான் நல்லது செய்ய ரெடி என்று எடுத்துக்கொள்வேன் என்ற ரீதியில் வேறு பேசினார் விஷால்.

ஏதோ ப்ளான் இருக்கு... அது நல்லதா இருந்தா நல்லது!

English summary
Political circles say that Vishal is having some secret plans to enter politics by using his community background.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil