»   »  நிச்சயதார்த்தம் முடிந்தது: ஆகஸ்டில் விஷால் வீட்டில் கெட்டிமேளம்

நிச்சயதார்த்தம் முடிந்தது: ஆகஸ்டில் விஷால் வீட்டில் கெட்டிமேளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா. அவர் தனது அண்ணனின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தார்கள்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க வேண்டி விஷால் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறப்பாக நடந்தது. இதில் இரு வீட்டார், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம்

திருமணம்

ஐஸ்வர்யாவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு வீட்டாரும் திருமண வேலைகளை துவங்கிவிட்டார்களாம்.

விஷால்

விஷால்

நடிகர் சங்க கட்டிடம் கட்டியவுடன் தனக்கு திருமணம் என்று முன்பு விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஷாலும், அவரது காதலி வரலட்சுமி சரத்குமாரும் பிரிந்துவிட்டனர். விஷாலுக்கு திருமணம் எப்பொழுது என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

English summary
Vishal's sister Aishwarya has got engaged on sunday. She is set to get married in august.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil