»   »  கத்திகளுக்கிடையே விளையாடும் விஷால்... -'துப்பறிவாளன்' மேக்கிங் வீடியோ!

கத்திகளுக்கிடையே விளையாடும் விஷால்... -'துப்பறிவாளன்' மேக்கிங் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஷால், வினய், பிரசன்னா, அனு இமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ் மற்றும் சிறப்பு வேடத்தில் மிஷ்கின் நடித்துள்ள 'துப்பறிவாளன்' படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிஷ்கின் எழுதிப் பாடிய 'இவன் துப்பறிவாளன்' பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த வாரம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. விஷால் பங்குபெறும் சண்டைக் காட்சிகள், சண்டைப் பயிற்சியாளர்களின் கத்திகளுக்கிடையே விஷால் தப்பிக்கும் காட்சி ஆகியவை படமாக்கப்பட்ட காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.

Vishal's 'Thupparivaalan' making video

இந்தப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப படம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் தான் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' மற்றும் சரத்குமாரின் 'சென்னையில் ஒரு நாள்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal's 'Thupparivaalan' movie got 'U/A' certificate in censor board. This movie is getting released on September 14.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X